ஆஸ்திரேலியா

குவாட் உச்சிமாநாடு இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு!

இந்தியா,  அமெரிக்கா,  ஆஸ்திரேலியா,  ஜப்பான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் குவாட் அமைப்பின் உச்சி மாநாடு ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வருகிற 24 திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் இந்திய பிரதமர் மோடி,  அமெரிக்க அதிபர் ஜோ பைடன்,  ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா,  ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் ஆகியோர் கலந்துகொண்டு பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது ஆஸ்திரேலிய பயணத்தை ரத்து செய்துள்ளார் என்றும் குவாட் மாநாட்டில் அவர் பங்கேற்க மாட்டார் என்றும் வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இதனையடுத்து  குவாட் மாநாட்டை ஆஸ்திரேலியா ரத்து செய்துள்ளது. இது தொடர்பாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கூறும்போது ‘சிட்னியில் அடுத்த வாரம் நடைபெற இருந்த குவாட் தலைவர்கள் கூட்டம் தொடராது. அதற்கு பதிலாக ஆஸ்திரேலியா,  அமெரிக்கா, இந்தியா,  ஜப்பான் ஆகிய நாடுகளின் தலைவர்கள் ஜப்பானில் இந்த வார இறுதியில் நடைபெறும் ஜி-7 உச்சி மாநாட்டில் சந்திப்பார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

VD

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித
error: Content is protected !!