கூலி பவர் ஹவுஸ் பாடலும் காப்பியா? மீண்டும் சிக்கலில் அனிருத்

பிரபல இசையமைப்பாளர் அனிருத் தற்போது வெளிவந்திருக்கும், வெளிவர இருக்கும் படங்களில், பெரும்பலான படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.
துள்ளல் இசையாக இருந்தாலும் சரி, காதல் பாடலாக இருந்தாலும் சரி, சோக பாடலாக இருந்தாலும் சரி, எல்லா வகையிலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சம்பாதித்து வைத்துள்ளார் அனிருத்.
தற்போது இவரது இசையமைப்பில் வெளிவர இருக்கும் படம்தான் “கூலி”. இந்த படத்திலும் இவர்தான் இசையமைத்துள்ளார், இதில் தற்போது வெளியான “பவர் ஹவுஸ்” பாடல் ரசிகர்கள் அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த பாடல் காப்பி அடித்து செய்த பாடல் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதில் உள்ள BGM அனிருத் அவர்கள் “industrial baby” என்ற ஆங்கில பாடலை காப்பி அடித்து இந்த பாடலை பாடியுள்ளாராம்.
இதற்கான ஒரிஜினல் பாட்டுடன் இந்த பாடலையும் இணைந்து troll செய்து வருகிறார்கள். இதுமட்டுமல்லாமல் இவர் இஞ்ச்களில் வெளிவந்து ஜெயிலர் பட BGM , வேதாளம் பட BGM, “காவாலா” பாடல் மியூசிக், “விக்ரம்” பட மியூசிக் போன்ற பாடலும் காப்பி அடித்துதான் போட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகின.