அட்லி – அனிருத் இடையே மனக்கசப்பு… சிம்புவுடன் புதிய நட்பு

சிம்பு மற்றும் அட்லி இருவருக்குமே சமீப காலமாக ஒரு நட்பு இருந்து வருகிறது. இவர்கள் இருவரும் அடிக்கடி போனில் பேசிக் கொள்கிறார்கள்.
இனிவரும் காலங்களில் சிம்பு, அட்லி இயக்கத்தில் நடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. தற்போது சிம்பு அடுத்தடுத்து மூன்று படங்கள் கையில் வைத்துள்ளார்.
சிம்பு 49 மற்றும் 51 ஆகிய படங்களுக்கு சாய் அபயேங்கர் இசையமைக்கிறார். ஐம்பதாவது படத்திற்கு மட்டும் தமன் இசையமைக்கிறார்.
சாய் அபயேங்கரை அட்லி தான் சிம்புவுடன் கோர்த்து விட்டிருக்கிறார். இதற்கு பின்னாடி பல காரணங்கள் இருக்கிறது.
சாய் அபயேங்கர் நல்ல திறமை உள்ள வளர்ந்து வரும் இசையமைப்பாளர். வருங்காலத்தில் திரையுலகை அனிருத் போல் இவர் ஆட்சி செய்வார்.
இவரை உங்கள் படத்தில் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என அட்லி சிம்புவிற்கு அறிவுரை கூறியுள்ளார். இதன் காரணமாகவே சிம்புவின் அடுத்த இரண்டு படங்களுக்கும் சாய் அபயேங்கர் கமிட் ஆகியுள்ளார்.
இது ஒரு பக்கம் இருந்தாலும் அட்லி ஒவ்வொரு படத்திற்கும் பதினைந்து கோடிகளுக்கு மேல் சம்பளம் கேட்கிறார். அது மட்டுமில்லாமல் இல்லாமல் வேலையை முடித்துக் கொடுப்பதற்கு நீண்ட காலம் எடுத்துக் கொள்கிறார். இதுவே பல இயக்குனர்களுக்கு எரிச்சலை கிளப்பி உள்ளது.
