கொழும்பில் இடம்பெற்ற விபத்து – புதுமண தம்பதிகளுக்கு ஏற்பட்ட நிலை

கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் மணமக்கள் உட்பட ஐவர் காயமடைந்துள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்களில் மணமகனும், மணமகளும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவில்லை எனவும், திருமண காரின் சாரதி, மற்றைய காரின் சாரதி மற்றும் சவாரி ஆகியோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 44 times, 1 visits today)