பிரபல நடிகை மீது கொதிக்கும் எண்ணெய் கொட்டியதால் பரபரப்பு
புஷ்பகவிமானம், புட்டாகதலு’ படங்களில் நடித்த சான்வி மேக்னா ‘குடும்பஸ்தன்’ படத்தில் மணிகண்டன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானார்.
குடும்பஸ்தன் படத்தில் குடும்ப தலைவியாக நடித்தாலும், சமூக வலைதளங்களில் கவர்ச்சி படங்களை வெளியிட்டு பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். இசை அமைப்பாளர் சாய் அபயங்கரின் ஆல்பம் ஒன்றில் தோன்றினார்.

இந்நிலையில், படப்பிடிப்பில் பங்கேற்றபோது, அருகில் இருந்த சூடான எண்ணெய் கொட்டி கை முழுக்க படுகாயம் ஏற்பட்டுள்ளதாக அவர் பதிவிட்டுள்ளார்.
‘விபத்துகள் எதிர்பாராத விதமாக நடக்கத்தான் செய்யும். மீண்டு வருவது நம் கையில் தான் இருக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

(Visited 3 times, 1 visits today)





