பெங்களூரு பெண்ணுடன் காதல்? மூன்றாவது திருமணத்திற்கு ரெடியானார் அமீர்கான்…
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அமீர்கான். இவர் கடந்த 1986-ம் ஆண்டு ரீனா தத்தா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
இந்த ஜோடிக்கு ஜுனைத் கான் என்கிற மகனும், ஐரா என்கிற மகளும் உள்ளனர்.
நடிகர் அமீர்கான் தன்னுடைய முதல் மனைவி ரீனா தத்தாவை கடந்த 2002-ம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார்.
ரீனா உடனான பிரிவுக்கு பின்னர் கிரண் ராவ் என்பவரை கரம்பிடித்தார் அமீர்கான். இந்த ஜோடிக்கு ஆசாத் என்கிற மகன் இருக்கிறார்.
எனினும், கடந்த 2021-ம் ஆண்டு தன்னுடைய இரண்டாவது மனைவியை விவாகரத்து செய்து பிரிந்தார் அமீர்கான்.
இரண்டு முறை விவாகரத்து பெற்ற பின்னர் சிங்கிளாக வாழ்ந்து வந்த அமீர்கான் தற்போது மீண்டும் காதலில் விழுந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இம்முறை பெங்களூருவை சேர்ந்த பெண் ஒருவரை அமீர்கான் காதலித்து வருவதாகவும் அவர்கள் இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாகவும் பாலிவுட் வட்டாரத்தில் தொடர்ந்து செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
ஆனால் அமீர்கான் தரப்பு இதுகுறித்து வாய் திறக்காமல் மெளனம் காத்து வருகிறது.