பொழுதுபோக்கு

உயிருக்கு ஆபத்து – கோடிக்கணக்கில் செலவு செய்துள்ள சல்மான் கான்…

பாலிவுட் நடிகர் சல்மான் கான் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்பதால் அவருக்கு அளித்து வரும் போலீஸ் பாதுகாப்பை அரசு தற்போது அதிகரித்து இருக்கிறது.

கடந்த 13ம் தேதி பாபா சித்திக் கொலைக்கு பிறகு சல்மான் கானுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. அவருக்கு லாரன்ஸ் பிஷ்நோய் என்ற கேங்ஸ்டர் கொலைமிரட்டல் விடுத்தது இருப்பது குறிப்பிடத்தக்கது.

Y+ பாதுகாப்பு அவருக்கு வழங்கப்பட்டு இருப்பதால் அவரை சுற்றி எப்போதும் 10 கமாண்டோ வீரர்கள், எக்கச்சக்க போலீஸ் என பாதுகாப்புக்கு இருப்பார்கள்.

இந்த நிலையில் தனது பாதுகாப்புக்காக சல்மான் கான் 2 கோடி ருபாய் செலவு செய்து குண்டு துளைக்காத கார் வாங்கி இருக்கிறார்.

Nissan Patrol SUV காரை அவர் வெளிநாட்டில் இருந்து வரவைத்து இருக்கிறாராம்.

தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் சல்மான் கான். அதன் செட்டில் கூட போலீஸ் அதிகமான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறதாம்.

(Visited 3 times, 3 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content