மின் தடை குறித்து அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை!
அமெரிக்காவில் குளிர்காலப் பகுதிகளில் மின்தடை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வட அமெரிக்க மின்சார நம்பகத்தன்மை கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பாக தரவு மையங்கள் உள்ள பகுதிகளில் மின்தடை குறித்த அபாயம் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
புதிய வளங்கள் மின்கட்டமைப்பில் சேர்க்கப்படுவதை விட மின்சார தேவை வேகமாக அதிகரித்து வருவதாகவும், கடந்த ஆண்டின் குளிர்காலப்பகுதியில் மாத்திரம் 20 ஜிகாவாட் மின்சாரம் அதிகமாக தேவைப்பட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடுமையான குளிர் காலநிலையின் போது சில பகுதிகள் விநியோக பற்றாக்குறையை எதிர்கொள்ள நேரிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 மணி நேரமும் செயல்படும் தரவு மையங்கள், தினசரி மின்சார தேவையை கணிசமாக அதிகரிக்கின்றன.
இதனால் வடகிழக்கு மற்றும் வடமேற்கு அமெரிக்கா, குறிப்பாக டென்னசி (Tennessee), தென் கரோலினா (South Carolina), டெக்சாஸ் (Texas) மற்றும் ஓக்லஹோமா (Oklahoma) ஆகியவை மின்சார விநியோக சிக்கல்களுக்கு முகம்கொடுக்க வேண்டி ஏற்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.





