இங்கிலாந்தில் அமெரிக்க XL புல்லி நாய்களுக்கு தடை
அமெரிக்க XL புல்லி நாய்கள் பிரித்தானியாவில் இனப்பெருக்கம் செய்ய தடை விதிக்கப்படும் என பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக இடம்பெற்ற தொடர் தாக்குதல்களுக்குப் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள பொதுமக்களின் எதிர்ப்பை அடுத்து இது இடம்பெற்றுள்ளது.
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் அமெரிக்க XL புல்லி நாய்கள் சமூகங்களுக்கு ஆபத்து என வர்ணித்துள்ளார்.
ஆபத்தான நாய்கள் சட்டத்தின் கீழ் அமெரிக்க XL புல்லி நாய்கள் இனப்பெருக்கம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது மற்றும் ஆண்டு இறுதிக்குள் புதிய விதிகள் நடைமுறைக்கு வரும்.
சமீபத்தில் இங்கிலாந்தின் பர்மிங்காமில் 11 வயது சிறுமி தாக்கப்பட்டு பலத்த காயம் அடைந்ததை அடுத்து, அமெரிக்க XL புல்லிக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது.
பிட்புல் டெரியர், ஜப்பானிய டோசா, டோகோ அர்ஜென்டினோ மற்றும் ஃபிலா பிரேசிலிரோ ஆகிய நான்கு நாய் இனங்கள் ஏற்கனவே இங்கிலாந்தில் தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது