வட அமெரிக்கா

அமெரிக்க விமானத்தில் பணிப்பெண்ணின் முகஞ்சுழிக்க வைக்கும் செயல்!

அமெரிக்க விமானமொன்றில் 3 வயதான குழந்தையின் உணவை விமான பணிப்பெண் பறிந்து சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

அமெரிக்கன் ஏர்லைன்சில் பயணித்த தாரா என்ற பயணி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு சிற்றுண்டி பெட்டியின் புகைப்படத்துடன் செய்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரது பதிவில்,

இன்று நான் எனது 3 வயது மருமகனுடன் விமானத்தில் பயணித்தேன். நானும், எனது மருமகனும் ஐபாடில் கேம் விளையாடி கொண்டிருந்தோம். அப்போது விமான பணிப்பெண் எனது மருமகனின் சிற்றுண்டி பெட்டியை எங்களை கேட்காமலேயே எடுத்து சென்று விட்டார்.

இதனால் நான் கோபமாக இருக்கிறேன். இதுகுறித்து அந்த விமான நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தை தொடர்பு கொண்டு புகார் செய்ய உள்ளேன் என கூறியிருந்தார்.மேலும் அவர் பதிவிட்ட புகைப்படத்தில் இருந்த சிற்றுண்டி பெட்டியில் தானியங்கள் மற்றும் வேர்க்கடலை, வெண்ணை, ஜாம் சாண்ட்விச் போன்ற திண்பண்டங்கள் இடம்பெற்றிருந்தன.

இந்நிலையில் அவரது இந்த பதிவை தொடர்ந்து விமான பணிப்பெண் நடந்த சம்பவத்திற்காக மன்னிப்பு கேட்டுள்ளார்.

(Visited 8 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்

You cannot copy content of this page

Skip to content