அமெரிக்கா துப்பாக்கிச்சூடு நடத்தும் – ஈரானிய அதிகாரிகளை மிரட்டும் ட்ரம்ப்!
ஈரானில் நாடு தழுவிய போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், ஈரானிய அரசாங்கப் படைகள் ஆர்ப்பாட்டக்காரர்களை குறிவைத்தால் அமெரிக்கா “துப்பாக்கிச் சூடு நடத்தும்” என்று டொனால்ட் ட்ரம்ப் அயதுல்லா அலி கமேனிக்கு ( Ayatollah Ali Khamenei) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
13வது நாளாக நடைபெற்று வரும் இந்த போராட்டங்களில், காவல்துறையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டுள்ளன.
இதன் விளைவாக குறைந்தது 62 போராட்டக்காரர்கள் உயிரிழந்துள்ளதுடன், 2200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் பரவலான இணையம் மற்றும் தொலைபேசி முடக்கமும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ட்ரம்பின் அரசாங்கம் போராட்டக்காரர்களை தூண்டி விடுவதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. இதனைத் தொடர்ந்தே ட்ரம்பின் எச்சரிக்கை வந்துள்ளது.
இதற்கிடையே இங்கிலாந்து பிரதமர், ஐ.நா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட சர்வதேசத் தலைவர்கள் வன்முறை குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.
மேலும் ஈரானிய அதிகாரிகள் கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்து குடிமக்களின் உரிமைகளை நிலைநிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





