புதிய பாதுகாப்பு உத்தியை வெளியிட்ட அமெரிக்கா – சீனாவை கைவிட்டது!
அமெரிக்கா புதிய தேசிய பாதுகாப்பு உத்தியை அறிவித்துள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய பாதுகாப்பு உத்திகளில் முன்பிருந்ததை விட குறிப்பிடத்தக்க மாற்றத்தை காணக்கூடியதாக உள்ளது.
புதிய உத்தியின்படி, சீனாவை முதன்மை பாதுகாப்பு சவாலாகக் கருதுவதை கைவிட்டு அமெரிக்க தாயகம் மற்றும் மேற்கு அரைக்கோளத்தின் பால் கவனம் செலுத்தியுள்ளது.
இதற்கு முன்பு வெளியிடப்பட்ட பாதுகாப்பு உத்திகளில் அமெரிக்கா எதிர்கொள்ளும் முக்கிய கள பாதுகாப்பு அச்சுறுத்தலாக சீனா பெயரிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் புதிய உத்தி அமெரிக்கா ஆதரிக்கும் கட்சிகளுக்கு அதிக பொறுப்பை வழங்குவதை வலியுறுத்துகிறது.
எதிர்காலத்தில் நண்பர்களின் பாதுகாப்பிற்காக அமெரிக்கா “வரையறுக்கப்பட்ட உதவியை” வழங்கும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த ஆவணத்தில் சீனாவிற்கு சொந்தமானது என்று கூறும் தைவானைப் பற்றிய எந்த நேரடி குறிப்பும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.





