“அமரன்” படத்திற்கு சர்வதேச திரைப்பட விழாவில் கிடைத்த அங்கீகாரம்
மறைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் தான் “அமரன்”.
இப்படத்தில் முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயனும் அவரது மனைவி இந்து வேடத்தில் சாய்பல்லவியும் தமது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.
ராஜ்குமார் பெரியசாமி படத்தை இயக்க கமல்ஹாசன் படத்தை தயாரித்திருந்தார்.
இப்படம் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இதைதொடர்ந்து, அமரன் கேரள திரைப்பட விமர்சகர்கள் சங்கத்தின் விருது விழாவில் ‘சிறந்த பிறமொழித் திரைப்படம்’ என்ற விருதை வென்றது. மேலும், 56 ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், தங்க மயில் விருதுக்கு ‘அமரன்’ திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

(Visited 1 times, 1 visits today)




