பொழுதுபோக்கு

சாய் பல்லவியின் கவர்ச்சி வீடியோ… “நான் ஒரு சதை பிண்டம் கிடையாது”

சிவகார்த்திகேயனின் அமரன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ள நடிகை சாய் பல்லவி தீபாவளிக்கு வெளியாகும் அந்த படத்திற்கான புரமோஷனை ஆரம்பித்து விட்டார்.

யூடியூப் சேனல்களில் நடிகை சாய் பல்லவி அமரன் படம் குறித்தும் சமீபத்தில் கிளம்பிய சர்ச்சைகள் குறித்தும் ஏகப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறார்.

கிளாமராக சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வர என்ன காரணம் என்பதற்கும் நடிகை சாய் பல்லவி தனது ஸ்டைலில் விளக்கம் கொடுத்துள்ளார்.

பிரேமம் படத்தில் நடிப்பதற்கு முன்னதாக வெளிநாட்டில் ஒரு நடன நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டேன். அந்த நடனத்திற்கு கொஞ்சம் கவர்ச்சியாக உடையணிந்து நடனமாடினால் தான் சரியாக இருக்கும் என நினைத்து ஆடியிருந்தேன்.

பிரேமம் படம் வெளியான சமயத்தில் பலரும் அந்த வீடியோவை வைரலாக்கி மோசமான கமெண்ட்டுகளை போட ஆரம்பித்து விட்டனர். அப்போதுதான் முடிவு செய்தேன் இனிமேல் இப்படி செய்யக் கூடாது என சாய் பல்லவி கூறியுள்ளார்.

Am not a piece of meat – உடம்பை காட்டித்தான் நடிக்க வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது என நினைத்தேன். ரசிகர்களை இந்த லுக்கிலேயே என் மீது அவ்வளவு அன்பு செலுத்தும் போது அதையே ஃபாலோ செய்யலாமே என்று தான் நடித்து வருகிறேன் என்றார்.

See also  கைது செய்யப்படுவாரா தமன்னா? 8 மணி நேரம் கிடுக்குப்பிடி

அதனால் தான் உங்களுக்கு சில பெரிய நடிகர்களுடன் இணைந்து நடிக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைக்காமல் போனதா? என்கிற கேள்வியை நீயா நானா கோபிநாத் எழுப்ப, அதனால் தான் வாய்ப்புகள் குறைகிறது என்றால், அதில் எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. என் நடிப்புத் திறமையை நம்பி எனக்கு வாய்ப்பு கொடுப்பவர்கள் படங்களில் நடித்து விட்டு போகிறேன் என நெத்தியடி பதிலை நடிகை சாய் பல்லவி கூறியுள்ளார்.

(Visited 4 times, 4 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content