அழகுக்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டாரா அல்லு அர்ஜுன்?
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இயக்குனர் ராகவேந்திர ராவ் தான் அல்லு அர்ஜுனை சினிமாவில் ஹீரோவாக அறிமுகப்படுத்தினார். தெலுங்கில் அவர் முதன்முதலில் நடித்த படம் கங்கோத்ரி.
இப்படம் சுமாரான வெற்றியைப் பெற்றது. அதன்பின் தன் விடாமுயற்சியால் விஸ்வரூப வெற்றி பெற்ற அல்லு அர்ஜுன் இன்று ஒரு படத்துக்கு 300 கோடி சம்பளம் வாங்கும் அளவுக்கு அசுர வளர்ச்சி கண்டுள்ளார். இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோவும் இவர் தான்.
டோலிவுட் வரலாற்றில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்ற ஒரே நடிகர் அல்லு அர்ஜுன் தான். இவ்வளவு பெரிய புகழைப் பெற்ற அல்லு அர்ஜுன் ஒரு விஷயத்தில் தொடர்ந்து கேலி செய்யப்படுகிறார்.
அது என்னவென்றால் அல்லு அர்ஜுன் அழகுக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்தக் கோணத்தில் அல்லு அர்ஜுனை மற்ற நடிகர்களின் ரசிகர்கள் கேலி செய்கிறார்கள்.
அல்லு அர்ஜுன் உண்மையில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தாரா இல்லையா என்பதை பிரபல அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ராஜசேகர் ஏற்கனவே ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார். அதில் அல்லு அர்ஜுனின் பழைய புகைப்படங்களை பார்த்த அவர், அல்லு அர்ஜுன் அறுவை சிகிச்சை செய்தது உண்மைதான் என கூறி இருக்கிறார்.
குறிப்பாக அவர் மூக்கு மற்றும் உதடுகளுக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகத் தெரிவதாக அவர் தெரிவித்துள்ளார். டாக்டர் ராஜசேகரின் கருத்துகளை நெட்டிசன்கள் வைரலாக்கினர். ஆனால் அல்லு அர்ஜுன் ரசிகர்கள் இதை திட்டவட்டமாக மறுத்து சமூக வலைதளங்களில் மல்லுக்கட்டி வருகின்றனர்.