6 நடிகைகளுடன் ஜோடி சேரும் மச்சக்காரா நடிகர்… யார் தெரியுமா?

ஒரு படத்தில் இரண்டு அல்லது 3 ஹீரோயின் இருந்தாலே அந்த படக்குழுவுக்கு, தயாரிப்புக்கு தரப்புக்கு ஏகப்பட்ட பிரச்னைகள் வெடிக்கும்.
ஹீரோயின்களுக்கு இடையேயான ஈகோ பிரச்னை வரும்.
எனக்கு அதிக சீன் வேண்டும். எனக்கு அந்த காஸ்ட்யூம் தேவை, அவளுக்கு மட்டும் அந்த பாடலா போன்ற விவாதங்கள் நடக்கும்.
ஆனால், அல்லு அர்ஜூனை வைத்து தான் இயக்கும் படத்தில் 6 ஹீரோயின்களை நடிக்க வைக்கப் போகிறாராம் அட்லி.
பான் இந்தியா படம் மாதிரி, பான் வேர்ல்ட் கதையாக அந்த படம் பெரிய பட்ஜெட்டில் உருவாகப் போகிறது. அதனால், இத்தனை ஹீரோயின்களாம். இதில் அட்லிக்கு பிடித்த சமந்தா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா ஆகியோர் இடம் பெறுவார்களா என தெரியவில்லை.
ஸ்ரீலீலா, ராஷ்மிகா, தீபிகா படுகோனே, கியாரா அத்வானி, ஊர்வசி ரவுட்டாலா என பல ஹீரோயின்களும் அந்த பட வாய்ப்பை பிடிக்க போட்டியில் இறங்கி இருக்கிறார்கள்.