பொழுதுபோக்கு

பான் வேர்ல்டு AA22xA6 படத்தின் இசை அமைப்பாளரை அறிவித்தார் அல்லு அர்ஜுன்

புஷ்பா படத்தின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பரபல்யமான அல்லு அர்ஜுனின் அடுத்த படம் குறித்த அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

அல்லு அர்ஜுன் இதற்கு முன் பல படங்களை நடித்திருந்தாலும் தெலுங்கைத் தாண்டி தமிழ், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் அவரை அடையாளப்படுத்தியது “புஷ்பா” என்று கூறலாம்.

இந்த நிலையில், அட்லீ இயக்கும் அல்லு அர்ஜுனின் 22ஆவது படமான AA22xA6 பான் இந்திய படமாக இல்லாமல், பான் வேர்ல்டு படமாக உருவாக இருக்கிறது. இப்படம் சுமார் 800 கோடி ரூபாய்க்கும் அதிகமான பொருட்செலவில் மிக பிரம்மாண்டமாக எடுக்கப்பட இருக்கிறது.

சன் பிக்சர்ஸ் இப்படத்தை இயக்குகிறது. இந்த நிலையில் சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார்.

நேற்று பிறந்தநாளை கொண்டாடிய சாய் அபயங்கருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறும் வகையில் நாயகன் அல்லு அர்ஜூன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

21 வயதான சாய் அபயங்கர் முன்னணி நடிகர்களின் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பை அடுத்தடுத்து பெற்று வருகின்றார்.

இதே வயதில் காலடி எடுத்து வைத்தவர் தான், அனிருத். அவரது பாணியில் அடுத்த புயலாக கிளம்பியுள்ளார் சாய் அபயங்கர்.

ஹாலிவுட்டில் அவதார் திரைப்படத்தை போல் இந்த படத்திற்காக ஒரு உலகத்தை கிராபிக்ஸ் தொழிநுட்ப உதவியுடன் உருவாக்கி வருகின்றனர். அல்லு அர்ஜுன் இப்படத்தில் மூன்று கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

நடிகை மிருணாள் தாக்கூர் இந்த கூட்டணியில் சேரக்கூடும் என்று கூறப்பட்டாலும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. மேலும், நடிகர் விஜய் சேதுபதி ஒரு சிறப்பு வேடத்தில் தோன்றலாம் என்றும் ஊகங்கள் தெரிவிக்கின்றன.

(Visited 2 times, 2 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!