செய்தி

குறுந்தூர் மலையில் ஏற்பட்ட அமைதியின்மையின் பின்னணியில் கத்தோலிக்கர் ஒருவர் இருப்பதாக குற்றச்சாட்டு!

குறுந்தூர் மலையில்  ஏற்பட்டுள்ள அமைதியின்மையின் பின்னணியில் கத்தோலிக்கர் ஒருவர் இருப்பதாக உள்ளூர் புலனாய்வுப் பிரிவினர் அடையாளம் கண்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பாதுகாப்பு குறித்து எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

நாட்டில் ஏற்படக்கூடிய இன மற்றும் மத கலவரங்கள் குறித்து சர்வதேச புலனாய்வு சேவைகள் அரசாங்கத்திற்கு எவ்வித எச்சரிக்கையும் விடுக்கவில்லை என அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அரசியல் தூண்டுதலுடன் நாட்டில் சில இடங்களில் இன மற்றும் மத கலவரத்தை ஏற்படுத்த சில குழுக்கள் முயற்சிப்பதாக உள்ளுர் புலனாய்வு சேவைகள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், அரசாங்கம், பாதுகாப்பு படையினர் மற்றும் புலனாய்வு பிரிவினர் அபிவிருத்திகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

முல்லைத்தீவில் வசிக்கும் கத்தோலிக்கர் ஒருவர் குருந்தூர் மலை சம்பவத்திற்கு விஷேட அக்கறை செலுத்தி அங்கு பிரச்சினைகளை ஏற்படுத்த முயற்சித்துள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் அடையாளம் கண்டுள்ளதாகவும்  அவர் மேலுமு் தெரிவித்துள்ளார்.

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!