அஜித்தின் விடாமுயற்சி இலங்கையில் படைத்துள்ள சாதனை
![](https://iftamil.com/wp-content/uploads/2025/02/25-67ab154cbf05e.jpeg)
நடிகர் அஜித் குமாரின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த விடாமுயற்சி திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
யதார்த்தமான கதைக்களத்தில் உருவாகி இருந்த இப்படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா நடித்திருந்தார்.
அதே போல் மங்காத்தா படத்திற்கு மாபெரும் வெற்றிக்கு பின் அர்ஜுன் இப்படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்திருந்தார்.
மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை உலகளவில் பெற்று வரும் விடாமுயற்சி திரைப்படம், இலங்கையில் 5 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இலங்கையில் இதுவரை 5.25 கோடி வரை வசூல் செய்துள்ளது. இந்திய மதிப்பில் ரூ. 1.53 கோடி வசூலை விடாமுயற்சி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
(Visited 1 times, 1 visits today)