பொழுதுபோக்கு

கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா?? இதோ பாருங்க…

நடிகர் அஜித், திரிஷா, அர்ஜுன், ஆரவ் என முன்னணி நடிகர்கள் கூட்டணியில் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் கடந்த ஆண்டிலேயே அசர்பைஜானில் துவங்கப்பட்ட நிலையில் சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த படத்தின் சூட்டிங் இடையிலேயே முடங்கியது.

கடந்த ஆறு மாத காலங்களாக இந்த படத்தின் சூட்டிங் நடத்தப்படாத நிலையில் கடந்த மாதம் 24ம் தேதி அசர்பைஜானிலேயே மீண்டும் சூட்டிங் துவங்கப்பட்டது.

முன்னதாக படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மிக சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடையே பெற்ற நிலையில் இன்றைய தினம் படத்தின் அடுத்தடுத்த லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இன்றைய தினம் படத்தின் அடுத்தடுத்து இரு போஸ்டர்களை ஒரே நேரத்தில் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இவற்றில் நடிகர் அஜித் சேசிங்கில் ஈடுபடுவதாக ஒரு லுக் காணப்பட்டது. அதேபோல கையில் நீண்ட நெடிய துப்பாக்கியுடன் அவர் மிக அழுத்தமான பார்வையுடன் மற்றொரு போஸ்டரில் காணப்படுகிறார். இந்த போஸ்டர்களில் Efforts never fail என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த படத்தின் சூட்டிங்கை இம்மாதத்திற்குள் நிறைவு செய்துவிட்டு அடுத்த கட்டமாக ஆகஸ்ட் மாதத்தில் குட் பேட் அக்லி படத்தின் சூட்டிங்கில் ஆதிக் ரவிச்சந்திரனுடன் அஜித்குமார் இணையவுள்ளார்.

See also  ரஜினியின் உடல்நல குறைவுக்கு லோகேஷ் தான் காரணம்? ஆதாரங்களுடன் அந்தணன்

இந்த படம் பொங்கலையொட்டி ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தீபாவளி மற்றும் பொங்கல் என அடுத்தடுத்த பண்டிகைகளில் இரு மாத இடைவெளிகளில் அஜித்தின் அடுத்தடுத்த படங்கள் ரிலீசாகவுள்ளது அவரது ரசிகர்களை மிகப்பெரிய கொண்டாட்டத்திற்கு உள்ளாக்கி உள்ளது.

(Visited 1 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content