அஜித் ரசிகர்களுக்கு அடுத்தடுத்த ஜாக்பாட்! ‘மங்காத்தா’ ரீ-ரிலீஸ் குறித்த மாஸ் அப்டேட்!
தமிழ் திரையுலகில் அஜித் குமாரின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான மைல்கல்லாக அமைந்த திரைப்படம் ‘மங்காத்தா’. வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான இப்படம், அஜித்தின் 50-வது படமாக வெளியாகி பிளாக்பூஸ்டர் வெற்றியைப் பெற்றது.
தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்கள் மறு வெளியீடு செய்யப்பட்டு வரும் நிலையில், அஜித்தின் இந்த ‘கல்ட் கிளாசிக் (Cult Classic)’ திரைப்படம் மீண்டும் திரையரங்கிற்கு வரவுள்ளது.

வரும் ஜனவரி 23-ம் தேதி முதல் ‘மங்காத்தா’ திரைப்படம் தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய திரையரங்குகளில் மீண்டும் திரையிடப்பட உள்ளது. அஜித்தின் பிறந்தநாள் அல்லது சிறப்பு தினங்கள் இல்லாத போதிலும், ரசிகர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இந்த மறு வெளியீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
நெகட்டிவ் ரோல் கொண்ட ‘விநாயக் மகாதேவ் மேனன்’ கதாபாத்திரத்தில் அஜித் காட்டிய அதிரடி, இன்றும் ரசிகர்களை கவர்ந்தது. மற்றும் யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை ‘வாடா பின்லேடா’ பாடல் திரையரங்குகளில் மீண்டும் அதிரப்போகிறது.
தற்போது அஜித் நடித்து வரும் ‘விடாமுயற்சி’ மற்றும் ‘குட் பேட் அக்லி’ ஆகிய படங்களின் வெளியிட்டிக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இடையில் ‘மங்காத்தா’ மறு வெளியீடு செய்யப்படுவது, ரசிகர்களுக்கு ஒரு செம எனர்ஜி பூஸ்டராக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.





