AK 64 : ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல் நடிக்கும் அஜித்தின் மாஸ்டர் பிளேன்

அஜித்குமார் ஏப்ரல் மாதம் குட் பேட் அக்லி என்கிற தரமான ஹிட் படத்தை கொடுத்து மாஸாக கம்பேக் கொடுத்தார். அப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருந்தார். இந்த இரண்டு படங்களிலும் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார்.
குட் பேட் அக்லி படத்தின் வெற்றிக்கு பின் அஜித் நடிக்க உள்ள ஏகே 64 படம் பற்றிய அப்டேட்டுகளும் அவ்வப்போது வெளியான வண்ணம் உள்ளன.
அஜித் நடிக்க உள்ள ஏகே 64 படத்தை இயக்க பல இயக்குனர்கள் போட்டிபோட்டாலும் அந்த வாய்ப்பை தட்டி தூக்கியது ஆதிக் ரவிச்சந்திரன் தான். குட் பேட் அக்லி படத்தில் பணியாற்றியபோதே ஆதிக்கின் ஒர்க்கிங் ஸ்டைல் அஜித்துக்கு பிடித்துப் போக, அவரையே தன்னுடைய அடுத்த படத்தை இயக்க சொல்லி இருக்கிறார் அஜித்.
தற்போது ஏகே 64 படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. அப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக கேஜிஎஃப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்க உள்ளதாக பேச்சு அடிபடுகிறது. இப்படத்திற்கும் ஜிவி பிரகாஷ் குமார் தான் இசையமைப்பார் என கூறப்படுகிறது.
ஏகே 64 திரைப்படத்தை முதலில் வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், பின்னர் திடீர் ட்விஸ்டாக இப்படத்தை பிரபல விநியோகஸ்தரான ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் இப்படத்தை தயாரிக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.
இப்படத்திற்காக அஜித் 200 கோடிக்கு மேல் சம்பளம் கேட்டதால் தான் பிற தயாரிப்பு நிறுவனங்கள் பின்வாங்கியதாக கூறப்படுகிறது. அப்படி இருக்கையில் ராகுல் எப்படி அஜித்துக்கு 200 கோடி சம்பளமும் கொடுத்து மேற்கொண்டு 120 கோடி பட்ஜெட்டில் படத்தையும் எடுப்பார் என கேள்வி எழுந்துள்ளது. அங்கு தான் ஒரு செம ட்விஸ்ட் நடந்துள்ளது.
அதன்படி ராகுல் அஜித்திடம் ஒரு செம டீல் போட்டிருக்கிறாராம். அதன்படி இப்படத்தில் நடிக்க அஜித்துக்கு சம்பளம் தராமல், இதன் ஓடிடி மற்றும் டிஜிட்டர் உரிமையை விற்பனை செய்வதன் மூலம் வரும் தொகை முழுவதையும் அஜித்துக்கே வழங்க முடிவெடுத்துள்ளாராம்.
ராகுல் தியேட்டர் மூலம் கிடைக்கும் வருமானத்தை எடுத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளாராம். நடிகர் அஜித் சம்பளமே வாங்காமல் புது டீல் போட்டு நடிப்பது இதுவே முதன்முறை ஆகும். ஏகே 64 திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகிற நவம்பர் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவும் ஒரு கேங்ஸ்டர் படமாக உருவாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.