பொறுமையை இழந்த சஞ்சை – வேப்பிலை அடித்த அஜித்
தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் லைக்கா தயாரிப்பில் சந்தீப் கிசாவை வைத்து ஒரு படம் இயக்க உள்ளார் என்பது அனைவரும் அறிந்தது. லைகா தற்சமயம் கடுமையான நிதி நெருக்கடியில் இருப்பதால் சஞ்சய் படத்தை இழுத்தடித்து வருகிறது.
படம் நீண்ட நாட்களாக இழுவையில் இருப்பதால் ஜேசன் சஞ்சய், லைகாவை நம்பி மன உளைச்சலில் இருக்கிறார். லைகா கைவசம் மூன்று படங்கள் தற்போது இருக்கிறது. அஜித்தின் விடாமுயற்சி, பிரித்திவிராஜ் நடிக்கும் மலையாள படமாகிய எம்பிரான் போன்ற படங்களை தற்சமயம் தயாரித்து வருகிறார்கள்.
ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த சஞ்சய் அவரின் மேனேஜர் சுரேஷ் சந்திராவிற்கு கால் செய்து இருக்கிறார். அஜித்திற்கும் இவர்தான் மேனேஜர். சஞ்சய் மற்றும் சுரேஷ் இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போது அஜித் பக்கத்தில் தான் இருந்திருக்கிறார்.
யார் என்று கேட்டதற்கு விஜய் மகன் ஜேசன் சஞ்சய் என்று கூறியதும், அஜித் போனை வாங்கி சஞ்சயிடம் பத்து நிமிடத்திற்கு மேல் பேசி உள்ளாராம். அந்த உரையாடலில் அவருக்கு நிறைய டிப்ஸ் கொடுத்து உள்ளார் ஏ கே.
அஜித்திடம், சஞ்சய் வேறு ஒரு தயாரிப்பாளரை பார்க்க திட்டம் போட்டு வருவதாகவும் கூறியுள்ளார். அதற்கு அஜித் “நீ அப்படி ஒரு முடிவில் உறுதியாக இருந்தால் தயாரிப்பாளர்களை நான் பரிந்துரைக்கிறேன்” அவர்களை சென்று பாருங்கள் என அறிவுரை வழங்கியுள்ளார்.