10 கோடி குடுத்து ட்ரீம் காரை வாங்கிய அஜித்…மாஸ் தகவல்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் அஜித். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து வெற்றியடைந்த திரைப்படம் குட் பேட் அக்லி.
இப்படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க த்ரிஷா ஜோடியாக நடித்திருந்தார். பெரும் எதிர்ப்பார்ப்புடன் வெளிவந்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்தது.
தற்போது, அஜித் தீவிரமாக ரேஸிங்கில் கவனம் செலுத்தி வரும் நிலையில், பல கோடி மதிப்பிலான ரேஸ் கார் ஒன்றை அஜித் வாங்கி இருக்கிறார்.
இங்கிலாந்தைச் சேர்ந்த மெக்லாரன் ஆட்டோமோட்டிவ் (MCLAREN Automotive) என்ற நிறுவனம் இந்த ரேஸ் காரை தயாரித்துள்ளது. இந்த காரின் மதிப்பு மட்டும் சுமார் ரூ.10 கோடி இருக்கும் எனக் கூறப்படுகிறது.
(Visited 2 times, 1 visits today)