இராஜராஜ சோழனாக அஜித்! அடுத்த வரலாற்று சம்பவம் லோடிங்…
																																		இல்லாத ஒன்றை இருப்பது போல் காட்டுவது தற்போதைய காலக்கட்டத்தில் சாதாரண ஒரு விடயமாகி விட்டது.
அதுவும் இறந்தவர்களை மீண்டும் இருப்பதுபோல் காட்டுவது தொழில்நுட்பத்தின், விஞ்ஞான உலகின் அதி உச்சம் என்றும் கூறலாம்.
இப்படித்தான் கடந்த நாட்களில் நடிகர்களின் AI புகைப்படங்கள் வெளியாகின. இதில் நடிகர் அஜித்தின் இராஜராஜ சோழன் படங்கள் செம்ம வைரலாகின.
இது உண்மையாகாதா என்று எண்ணுவோர் ஏராளம் பேர் இருக்கின்றனர். அஜித்தின் தோற்றமும், அழகும், நடையும் ஒரு ராஜாவுக்கு நிகராகவே இருக்கும்.
இது இயக்குனர் விஷ்ணுவர்தனின் காதுகளுக்கு எட்டிவிட்டது போல் உள்ளது.
2003 ஆம் ஆண்டில் தெலுங்கு திரைப்படமான ‘குறும்பு’ என்ற திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமாகினார் விஷ்ணுவர்தன். அதைத் தொடர்ந்து தமிழில் அறிந்து அறியாமலும், பட்டியல் போன்ற வெற்றி படங்களை கொடுத்தார்..
அஜித் நடிப்பில் 2007 ஆம் ஆண்டு வெளியான ‘பில்லா’ திரைப்படத்தை இயக்கினார்.
அதைத்தொடர்ந்து மீண்டும் அஜித்தை வைத்து ஆரம்பம் திரைப்படத்தை இயக்கினார்.
இந்த நிலையில், அஜித்தை வைத்து மீண்டும் படம் எடுக்க ஆசைப்படுகின்றார் இயக்குனர் விஷ்ணுவர்தன்.
அதும் “நடிகர் அஜித்தை வைத்துஇராஜராஜ சோழனின் வரலாற்றை பெரிய அளவில் ஒரு படமாக எடுக்க ஆசை என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அஜித்தின் கம்பீரமான தோற்றத்திற்கு அந்த கதாப்பாத்திரம் அவருக்கு கச்சிதமாக பொருந்தும்.
அஜித் சார் தான் இதற்கு பதில் கூற வேண்டும்” என்று கூறியுள்ளார்.
இதற்கு முன்னர் இராஜராஜ சோழனாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்திருந்தார்.
அதேபோல் இளம் புயல் ரவி மோகனும் பொன்னியின் செல்வன் படத்தில் இராஜராஜ சோழனாக நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

        



                        
                            
