விடாமுயற்சியில் இணைந்த விஜய் டிவி பிரபலம்… யாருன்னு பாருங்க…
தல நடிக்கும் விடாமுயற்சி ஒரு வழியாக 2025 பொங்கலுக்கு வெளிவர இருக்கிறது. சமீபத்தில் இதன் அறிவிப்பை லைக்கா வெளியிட்டது.
அதை அடுத்து அஜித் ஜேம்ஸ் பாண்ட் கெட்டப்பில் இருக்கும் போட்டோவும் வெளியானது. அதே போல் திரிஷாவின் கரம்பிடித்தபடி இருக்கும் போட்டோவும் வைரலானது.
இந்த நிலையில் தற்போது மற்றொரு அப்டேட்டை லைக்கா வெளியிட்டுள்ளது. அதாவது விடாமுயற்சி படத்தில் விஜய் டிவி தொகுப்பாளினியான ரம்யா இணைந்துள்ளார்.
அஜித் பட்டு வேட்டி சட்டையில் இருக்க அவருக்கு அருகில் ரம்யா புடவையில் கை கூப்பியபடி நிற்கிறார். இதை பார்க்கும் போது ஏதோ திருமண விழா போன்று தெரிகிறது.
படம் வெளியாவதற்கு இன்னும் சில வாரங்கள் மட்டுமே இருக்கிறது. அதுவரை ஏதாவது ஒரு போட்டோவை போட்டு அப்டேட் கொடுக்குறீங்களே, எங்களுக்கு ஒண்ணுமே புரியல என ரசிகர்கள் இதற்கு பதில் அளித்து வருகின்றனர்.