அஜித் – ஆதிக் ரவிச்சந்திரனின் புதிய பட அப்டேட்
அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் புதிய படத்துடைய ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்பது குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த இருவரின் காம்போவில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படத்தைத் தொடர்ந்து அஜித்குமார் புதிய படத்தைத் தொடங்குவதற்கு முன்பாக கார் ரேஸ்களில் கவனம் செலுத்தி வந்தார்.
சமீபத்தில் அஜித்குமார் பொது வெளியில் அதிகமாக காணப்படுகின்றார். குடும்பத்துடன் நேரத்தை செலவிடுகின்றார்.
இந்த நிலையில் அஜித்குமார் தனது புதிய படத்திற்குத் தயாராகி வருகிறார்.
இந்தப் படத்தையும் குட் பேட் அக்லி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளார். இந்த நிலையில் இந்த படத்துடைய ஷூட்டிங் அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்கும் என தகவல்கள் வெளிவந்துள்ளன.
மேலும் அஜித்தின் அடுத்த படம் தீபாவளியையொட்டி வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






