பொழுதுபோக்கு

பிக் பாஸ் பிரதீப்பிடம் கதறிய ஐஷூ தந்தை… வெளியான வாட்ஸ்அப் ஸ்கிரீன் ஷாட்கள்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஐஷூவை வெளியேற்ற வேண்டும் என அவரது தந்தை பிரதீப்பிடம் பேசி இருக்கும் வாட்ஸ்அப் ஸ்கிரீன்ஷாட் தற்போது வெளியாகி இருக்கிறது.

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஐஷூ வெளியேற்றப்பட்டார். நிக்சனுடன் அவர் காட்டிய நெருக்கம் பிக் பாஸ் பார்வையாளர்கள் மத்தியில் பெரும் விமர்சனத்திற்குள்ளானது. இதுமட்டுமல்லாது, அவரது குடும்பத்தையும் தாக்கி பல நெகட்டிவான விமர்சனங்களையும் இணையத்தில் பார்க்க முடிந்தது. இதனையடுத்து ஐஷூ குறைந்த மக்கள் வாக்குகள் அடிப்படையில் வெளியேற்றப்பட்டதாக கமல்ஹாசன் அறிவித்தார்.

வெளியே வந்ததும், பிக் பாஸை தான் சரியாக பயன்படுத்தவில்லை எனவும் தன் குடும்பத்தின் மீது நெகட்டிவிட்டி பரப்ப வேண்டாம் எனவும் ஐஷூ கூறி இருந்தார்.

Image

Image

இந்த நிலையில், ஐஷூவின் தந்தை பிரதீப்புடன் வாட்ஸ்அப்பில் பேசிய ஸ்கிரீன் ஷாட் வெளியாகி இருக்கிறது. அதில் நிக்சனிடம் இருந்து ஐஷூவை காப்பாற்ற வேண்டும் எனவும் மாயா, பூர்ணிமா இருவரும் தங்களது மகளை இன்ஃபுளூயன்ஸ் செய்கிறார்கள் எனவும் பிரதீப்பிடம் கூறி இருக்கிறார் ஐஷூவின் தந்தை. மேலும், பிரதீப்பின் பெயரைப் பயன்படுத்தி ஐஷூவை அவர்கள் இருவரும் உபயோகித்து கேம் விளையாடியதற்கும் மன்னிப்பு கேட்டுள்ள அவர், இணையத்தில் இருந்து வரும் நெகட்டிவிட்டி தாங்க முடியவில்லை எனவும் முடிந்தால் ஐஷூவை வெளியேற்ற உதவ வேண்டும் எனவும் பிரதீப்பிடம் கேட்டுள்ளார்.

இதற்கு பிரதீப், ஐஷூவை தான் தவறாக நினைக்கவில்லை எனவும் தன்னால் முடிந்தளவு உதவுகிறேன் எனவும் கூறியுள்ளார்

Mithu

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!