கென்யாவில் விமான ஆம்புலன்ஸ் விபத்து – 06 பேர் உயிரிழப்பு!

கென்யாவில் ஒரு விமான ஆம்புலன்ஸ் விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் இறந்ததாகவும், இரண்டு பேர் காயமடைந்ததாகவும் வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டின் தலைநகர் நைரோபிக்கு அருகிலுள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் விமானம் மோதியது.
உள்ளூர் நேரப்படி நேற்று (7) பிற்பகல் 2:17 மணிக்கு வில்சன் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட நடுத்தர அளவிலான ஜெட் விமானம், சோமாலிலாந்திற்கு பறந்து கொண்டிருந்தபோது, பிற்பகல் 3 மணியளவில் விபத்துக்குள்ளானது.
விபத்து நடந்த நேரத்தில் விமானி உட்பட நான்கு பேர் விமானத்தில் இருந்தனர், மேலும் அவர்கள் அனைவரும் உயிரிழந்தனர்.
விமானம் விபத்துக்குள்ளானபோது மற்ற இரண்டு பேரும் குடியிருப்பு பகுதியில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
(Visited 1 times, 1 visits today)