வின்சி அலோஷியஸைத் தொடர்ந்து மலையாள நடிகர் சாக்கோ மீது மேலும் ஒரு பாலியல் புகார்

மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ, தமக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாக மேலும் ஒரு நடிகை புகார் எழுப்பியுள்ளார்.
நடிகர் சாக்கோ போதைப்பொருள் பயன்படுத்துவார் என்றும் தன்னிடம் ஒருமுறை போதையில் அத்துமீறினார் என்றும் மலையாள நடிகை வின்சி அலோஷியஸ் அண்மையில் கூறியிருந்தார்.
இதையடுத்து, சாக்கோவை விசாரிக்க போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர், அவர் தங்கியிருந்த விடுதிக்குச் சென்றபோது, அங்கிருந்து தப்பியோடிவிட்டார் சாக்கோ.
பின்னர் காவல்துறையில் சரணடைந்த அவருக்குப் பிணை வழங்கப்பட்டது.
தற்போது நடிகை அபர்ணா ஜோன்ஸ் என்பவரும் ஷைன் டாம் சாக்கோ மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.‘சூத்திர வாக்கியம்’ என்ற மலையாளப் படத்தில் சாக்கோவுடன் நடித்தபோது, அவர் போதைப்பொருள் பயன்படுத்துவதை தாம் பார்த்ததாக தாம் இன்ஸ்டகிராம் பதிவில் அபர்ணா குறிப்பிட்டுள்ளார்.
“இதுகுறித்து படத்தயாரிப்புத் தரப்பிடம் உடனடியாகப் புகார் அளித்தேன். தற்போது ஆஸ்திரேலியாவில் இருக்கிறேன். புகார் அளித்தால் இந்தியாவுக்கு வர வேண்டியிருக்கும் என்பதால்தான், இதுவரை காவல்துறையை அணுகவில்லை,” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்