பொழுதுபோக்கு

கீர்த்தி சுரேஷுக்கு விழுந்த அடி… ராசியில்லாத தங்கச்சியாகி விட்டார்

அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்த நடிகை கீர்த்தி சுரேஷ், தற்போது போலா ஷங்கர் படம் மூலம் தங்ாயாக நடித்து மீண்டும் தோல்வியை சந்தித்து உள்ளார்.

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக உயர்ந்தார் கீர்த்தி.

இதையடுத்து தெலுங்கில் மகாநடி படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்ற பின்னர் கீர்த்தி சுரேஷுக்கு கிடைத்த பிரம்மாண்ட வாய்ப்பு தான் பொன்னியின் செல்வன்.

மணிரத்னம் இயக்கிய இந்த பிரம்மாண்ட படத்தில் குந்தவையாக நடிக்க முதலில் கமிட் ஆனது கீர்த்தி சுரேஷ் தான். ஆனால் அந்த சமயத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் அண்ணாத்த படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததால், பொன்னியின் செல்வனில் இருந்து விலகினார் கீர்த்தி.

சிறுத்தை சிவா இயக்கிய அண்ணாத்த திரைப்படத்தில், ரஜினிகாந்துக்கு தங்கையாக நடித்திருந்தார் கீர்த்தி சுரேஷ்.

ஆனால் இப்படம் தோல்வி படமாகவே அமைந்தது. இதையடுத்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வந்த கீர்த்தி சுரேஷுக்கு, மீண்டும் ஒரு தங்கச்சியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த முறை தெலுங்கு சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவிக்கு தங்கையாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார் கீர்த்தி சுரேஷ்.

அண்ணாத்த படத்தில் மிஸ் பண்ணியதை போலா ஷங்கர் படம் மூலம் மீட்டெடுத்து விடலாம் என ஆவலோடு காத்திருந்த கீர்த்தி சுரேஷை, கிரிஞ் நடிகையாக்கி விட்டது இந்த போலா ஷங்கர். அண்ணாத்த படம் விமர்சன ரீதியாக தோல்வியை தழுவினாலும் பாக்ஸ் ஆபிஸில் ரூ.175 கோடி வசூலித்தது.

ஆனால் போலா ஷங்கருக்கு அதில் பாதிகூட தேறாது என கூறப்படுகிறது. இதன்மூலம் ராசியில்லாத தங்கச்சி ஆகி இருக்கிறார் கீர்த்தி. போலா ஷங்கர் படத்தின் தோல்வியால் கீர்த்தி சுரேஷை நெட்டிசன்கள் மீம் போட்டு கிண்டலடித்து வருகின்றனர். அஜித் நடித்த வேதாளம் படத்தின் ரீமேக் தான் இந்த போலா ஷங்கர் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!