ஆறு வயதிலேயே எனக்கு அந்த நோய் இருந்தது…சுஹாசினி

கமல்ஹாசன் குடும்பத்தில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் சுஹாசினி. 1980 மற்றும் 90களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் .
தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது குணசித்ர வேடங்களில் நடித்து வருகிறார்.
சுஹாசினிக்கு சிறு வயதில் இருந்தே காச நோய் பாதிப்பு இருக்கிறது. இந்த தகவலை இப்போது வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
எனக்கு ஆறு வயதிலேயே காசநோய் பிரச்னை இருந்தது. அதற்கு சிகிச்சை எடுத்தேன். பிறகு குறைந்துவிட்டது. எல்லாம் சரியாகி விட்டது என்று இருந்தேன்.
ஆனால் 36 வயதில் மீண்டும் அந்த வியாதி வந்து விட்டது. இதன் காரணமாக எனக்கு திடீரென்று எடை கூடி விட்டது. அதுமட்டுமன்றி கேட்கும் திறனிலும் பிரச்சினை ஆரம்பித்து விட்டது. மீண்டும் சிகிச்சை எடுத்துக் கொண்டேன்.
சிகிச்சைக்கு பிறகு மெல்ல மெல்ல காச நோய் பாதிப்பு குறைந்து குணமாகி விட்டேன். இதை அப்போது யாருக்கும் தெரியாமல் மறைத்து விட்டேன். வெளியே சொல்வதை கவுரவக் குறைவாகவும் நினைத்தேன்.
ஆறு மாதங்கள் ரகசியமாகவே சிகிச்சை எடுத்துக் கொண்டேன். அதை இப்போது சமூகத்துக்கு தெரிவிக்க வேண்டும் என்பதற்காகவே வெளியே சொல்கிறேன். இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.