பொழுதுபோக்கு

“உடை மாற்ற மட்டுமல்ல கேரவன், எல்லாம் நடக்கும்” மனம் திறந்த ஷகீலா!

கடந்த 1994ஆம் ஆண்டு தமிழ் மொழியில் வெளியான “ப்ளே கேர்ள்ஸ்” என்கின்ற திரைப்படத்தின் மூலம் தான் தனது கலை உலக பயணத்தை தொடங்கினார் நடிகை சகிலா. ஆரம்பம் முதலே கவர்ச்சிகரமான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்த ஷகீலா, கடந்த 1997ம் ஆண்டு மலையாள மொழியில் வெளியான “ஷோபனம்” என்கின்ற திரைப்படத்தில் நடித்தார்.

அதன் பிறகு மலையாள மொழியில் மட்டும் வருடத்திற்கு 25க்கும் மேற்பட்ட படங்களில் நடிக்கும் முன்னணி நடிகையாக அவர் மாறினார்.

என்ன தான் வருடத்திற்கு 25 படங்கள் என்றாலும், அவர் நடித்த அந்த திரைப்படங்கள் அனைத்துமே கவர்ச்சியை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய திரை உலகை பொறுத்தவரை கடந்த 33 ஆண்டுகளாக பயணித்து வரும் ஷகீலா, கடந்த சில வருடங்களாகவே குணச்சித்திர கதாபாத்திரங்களையும் ஏற்று நடிக்க தொடங்கியுள்ளார். அதற்கு முக்கிய காரணம் பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றிய ஒளிபரப்பான “குக் வித் கோமாளி” என்கின்ற நிகழ்ச்சி தான் என்றால் அது மிகையல்ல.

அண்மையில் அவர் பங்கேற்று பேசிய பேட்டி ஒன்றில், பல விஷயங்கள் குறித்து வெளிப்படையாகவும், உண்மையாகவும் அவர் பேசியிருக்கிறார்.

“நான் நடிக்க தொடங்கிய காலத்தில் ஒரு நடிகையாக எங்களால் உடையை கூட சரியான இடத்தில் மாற்றிக்கொள்ள முடியாது. ரிமோட்டான இடங்களுக்கு ஷூட்டிங் செல்லும் பொழுது, மேலே ஒரு பெரிய ஆடையை போட்டுக்கொண்டு, ஏற்கனவே நாங்கள் அணிந்திருக்கும் ஆடைகளை மாற்றும் நிலைகூட எங்களுக்கு ஏற்பட்டுள்ளது”.

“எங்களை சுற்றி நூற்றுக்கணக்கான ஆண்கள் அப்போது நின்று கொண்டிருப்பார்கள் என்பது தான் வேதனையின் உச்சம். இப்போது உள்ளது போல அப்போது கேரவன்கள் கலாச்சாரமும் பெரிய அளவில் கிடையாது.

இன்னும் சொல்லப்போனால் நீங்கள் நினைப்பது போல கேரவேனில் உடைமாற்றும் விஷயங்கள் மட்டும் நடப்பதில்லை. உள்ளே சில பேர் ஒன்றாக கூடி உணவு உண்பார்கள், சில நேரங்களில் உடலுறவு கூடகொள்வார்கள்.”

“இதை நான் நேரில் பார்த்ததில்லை என்றாலும், பல நேரங்களில் இது குறித்த விஷயங்களை என் காதார கேள்விப்பட்டிருக்கிறேன். ரூபாஸ்ரீ என்ற நடிகை திரைப்பட ஷூட்டிங்கின்போது, ஒரு அறைக்குள் இருந்தார். அப்போது நடிகர் ஒருவர் அவருடைய அரை கதவை தட்டி, அவரை வெளியே அழைத்து, அவருக்கு உதவி ஏதும் தேவைப்படுமோ என்று எண்ணி அதனால் கதவை தட்டியதாக கூறிய சம்பவத்தை நினைவு கூர்ந்த ஷகீலா, தனக்கு அதுபோல எதுவும் நடந்ததில்லை” என்று கூறியுள்ளார்.

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு கவர்ச்சிகரமான கதாபாத்திரங்கள் மட்டுமே நடித்து வந்த நான், ஒரு படத்தில் அன்னை தெரேசாவாக நடித்திருக்கிறேன். அந்த இயக்குனர் என் கண்ணில் காமம் தெரியவில்லை, மாறாக இறக்கம் தான் தெரிகிறது, அதனால் தான் உங்களை அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கிறேன் என்று கூட என்னிடம் கூறியிருக்கிறார். நானும் அந்த படத்தில் ஆனந்தமாக நடித்தேன், ஆனால் 15 வருடங்கள் கடந்துவிட்டது, ஆனால் அந்த படம் வெளியாகவில்லை.

(Visited 1 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content