மயோசிட்டிஸ் சிகிச்சையால் சமந்தாவுக்கு ஏற்பட்ட புது பிரச்சனை… அதிர்ச்சி தகவல்
திருமணமாகி விவாகரத்து பெற்ற பின்பும் கூட, தொடர்ந்து கதாநாயகியாக நடித்து தென்னிந்திய திரையுலகில் புது ட்ரெண்டை உருவாக்கினார் சமந்தா ரூத் பிரபு.
இவரை தொடர்ந்து, தற்போது பல நடிகைகள் திருமணம் ஆன பின்னர் ஹீரோயினாக நடித்து வருகிறார்கள்.
நாக சைதன்யாவை பிரிந்த சில மாதங்களில், உடலில் உள்ள தசைகளை பாதிக்கும் மயோசிட்டிஸ் எனும் பிரச்சனையால் சமந்தா பாதிக்கப்பட்டு, எழுந்து நடக்க கூட முடியாத நிலைக்கு சென்றார். அந்த நிலையிலும் கையில் குளுக்கோஸ் ஏறிக்கொண்டிருக்க இவர் டப்பிங் பணிகளை மேற்கொண்டது ரசிகர்களை பிரமிக்க வைத்தது. அதே போல் பிரபலங்கள் பலரும், விரைவில் சமந்தா, இந்த பிரச்சனையில் இருந்து விடுபட வாழ்த்து கூறினர்.

பின்னர் அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை எடுத்த பின்னர்… ஓரளவு உடல் நலம் தேறிய சமந்தா, தன் கைவசம் இருந்த குஷி படம் மற்றும் சிட்டாடல் வெப் தொடரில் நடித்து முடித்த பின்னர் மயோசிட்டிஸ் பிரச்சனையில் இருந்து முழுமையாக குணமடைய தற்காலிகமாக சினிமாவில் இருந்து விலகி, சிகிச்சை எடுக்க சமந்தா முடிவு செய்ததாக கூறப்பட்டது.
இதனால் தற்போது வரை சமந்தா, எந்த படங்களிலும் கமிட் ஆகவில்லை. ஆனால் தற்போது சில பாலிவுட் படங்களில் இவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

தற்போது சமந்தா மயோசிட்டிஸ் சிகிச்சையில் இருக்கும் நிலையில், சமீபத்தில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேள்வி பதில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். பின்தொடர்பவர்களில் ஒருவர் சமந்தாவின் சருமம் பற்றி அவரிடம் கேட்டார். மேலும் அவர் மயோசிடிஸ் சிகிச்சைக்காக எடுக்க வேண்டிய ஸ்டீராய்டு ஷாட்களின் காரணமாக அவரது தோலின் தன்மை மாறிவிட்டதாக கூறி அதிர்ச்சி கொடுத்தார்.

தோலில் Pigmentation அதிகம் இருப்பதால், அதை சரி செய்ய தனி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என சமந்தா கூறியுள்ளார். சமந்தாவின் இந்த Pigmentation பிரச்சனை… மயோசிட்டிஸ் பிரச்சனையில் இருந்து முழுமையாக குணமடைந்த பின்னர், துவங்கும் என கூறப்படுகிறது. இந்த சிகிச்சைக்கு சின்மயி தான் சமந்தாவுக்கு உதவ உள்ளாராம். ரசிகர்கள் விரைந்து உங்களின் பிரச்சனைகள் குணமாக வேண்டும் என பிரார்த்தனை செய்வதாக கூறி வருகிறார்கள்.






