அந்தமாதி படங்களில் நடிப்பதை 27 வயதிலேயே நிறுத்திவிட்டேன் – நடிகை ஜோதிகா

தமிழில் சூர்யாவின் பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற படத்தில் நடித்து நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஜோதிகா.
பின் முகவரி, குஷி, ரிதம், தெனாலி என முன்னணி நாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர் ரஜினியுடன் சந்திரமுகி படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானார்.
பிஸியாக நடித்துக் கொண்டு வந்தவருக்கு நடிகர் சூர்யாவுடன் காதல் ஏற்பட இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தியா மற்றும் தேவ் என ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
திருமணம், குழந்தைகள் என சினிமா பக்கம் வராமல் இருந்த ஜோதிகா இப்போது மீண்டும் நடிப்பில் பிஸியாகிவிட்டார். தற்போது, டப்பா கார்ட்டெல் என்ற பாலிவுட் வெப் சீரிஸிலும், லையன் என்ற தமிழ் படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று டப்பா காட்டெல் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. அப்போது ஜோதிகா பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அதில், “காதல் மையப்படுத்திய படங்களில் நடிப்பதை நான் 27 வயதிலேயே நிறுத்திவிட்டேன்.
இப்போது எனக்கு 47 வயதாகிறது. தற்போது, பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் தான் நடிக்க விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.