நடிகை பியூமி ஹன்சமாலியின் மகன் பிணையில் விடுதலை
நடிகை பியூமி ஹன்சமாலியின் மகன் கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அதன்படி, அவரை 500,000 ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டது.
ராஜகிரிய, கலபலுவாவாவில் ஒரு நபரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக ஹன்சமாலியின் மகன் வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
மோட்டார் வாகன விபத்தைத் தொடர்ந்து ஒரு குழுவுடன் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். தாக்கப்பட்ட நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வெலிக்கடை பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.





