பொழுதுபோக்கு

நடிகையால் ஹீரோவின் குடும்பத்தில் சிக்கல்… இரண்டு பக்கமும் அடி வாங்கும் ஹீரோ

சினிமாவின் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து இப்போது ஒரு பெரிய நடிகராக உருவெடுத்திருக்கிறார். இவர் சினிமாவிற்கு வருவதற்கு முன்பே திருமணமாகி குடும்பம் குட்டியாக இருந்தார்.

இந்த சூழலில் ஒரு படத்தில் அக்கட தேச நடிகையுடன் நடித்திருந்தார். இதன் மூலம் நடிகைக்கு ஹீரோ மீது காதல் வந்துள்ளது. இந்த விஷயம் நடிகரின் மனைவிக்கு தெரிய வர நடிகையை கண்டித்து அனுப்பியிருக்கிறார்.

ஆனால் அதன்பிறகு மனைவியின் பேச்சுக்கு கட்டுப்பட்டு அந்த நடிகையுடன் நடிக்காமல் இருந்தார். சேர்ந்து பட வாய்ப்பு வந்தாலும் அதை தவிர்த்து வந்தார். ஆனால் மனைவிக்கு தெரியாமல் வெளியில் அந்த நடிகையுடன் சுற்றித் திரிந்து இருக்கிறார்.

சமீபத்தில் நடிகை நடித்த படம் பெரிய ஹிட் ஆன நிலையில் பார்ட்டி கொண்டாடப்பட்டது. இதில் அந்த நடிகரையும் நடிகை அழைத்திருக்கிறார். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியான நிலையில் மனைவி அதிர்ச்சி ஆகிவிட்டார்.

இது பற்றி கணவரிடம் கேட்கும்போது அந்த நடிகை தான் அழைத்தார் என்று சாக்குபோக்கு சொல்லி இருக்கிறார். உன்னை திருத்தவே முடியாது, இனி அந்த பொண்ணோட பேசினா உனக்கு விவாகரத்தை கொடுத்து விடுவேன் என காட்டம் காட்டியுள்ளார்.

நடிகையோ ஒரு புறம் தொடர்ந்து ஹீரோவுக்கு டார்ச்சர் கொடுத்து வருகிறார். மத்தளம் போல் இரண்டு பக்கமும் அடி வாங்கிக்கொண்டு என்ன செய்வது என்று திக்கு தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார் ஹீரோ.

 

 

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!