தளபதி 68 பூஜை வீடியோ இதோ… தளபதியுடன யார் யார் எல்லாம் இருக்காங்க தெரியுமா?

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாக உள்ள தளபதி 68 படத்தின் பூஜை வீடியோ வெளியானது. இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் இணைந்து பல பிரபல நடிகர்கள் நடிக்க உள்ளனர் என்பதையும் பூஜை வீடியோ ரிவீல் செய்துள்ளது.
நடிகர்கள் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், அஜ்மல், மீனாக்ஷி சவுத்ரி, சினேகா, லைலா மற்றும் வெங்கட் பிரபுவின் ஆஸ்த்தான நடிகர்களான தம்பி பிரேம்ஜி முதல் மொத்த விபி கேங்கும் இந்த படத்தில் இணைந்துள்ளனர்.
பல வருடங்கள் கழித்து நடிகர் விஜய்யின் தளபதி 68 படத்தில் இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா இணைந்துள்ள அறிவிப்பையும் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனம் அதிரடியாக வெளியிட்டுள்ளது.
தளபதி 68 படத்தின் பூஜை விஜயதசமியை முன்னிட்டு இன்று வெளியானது. ஏற்கனவே 15 நாட்கள் ஃபர்ஸ்ட் ஷெட்யூலே முடிந்து விட்டதாக வெங்கட் பிரபு அறிவித்துள்ளார்.
https://twitter.com/archanakalpathi/status/1716705062247141828