பொழுதுபோக்கு

துருவ நட்சத்திரம் படத்திற்கு அடி மேல் அடி… கௌதம் மேனனுக்கு வில்லனாக மாறிய சிம்பு..

விக்ரம் – கெளதம் மேனன் கூட்டணியில் உருவான துருவ நட்சத்திரம், இன்று (நவ.24) வெளியாகவிருந்தது.

ஏற்கனவே பல தடைகளை கடந்து வெளியாகவிருந்த இந்தப் படம், இப்போதும் ரிலீஸில் இருந்து பின்வாங்கியுள்ளது. ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் துருவ நட்சத்திரம் படத்தை திரையிட அனுமதிக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது.

இந்நிலையில், துருவ நட்சத்திரம் ரிலீஸாகாமல் போனதற்கு நடிகர் சிம்புவும் காரணம் என சொல்லப்படுகிறது.

இன்று ரிலீஸாகவிருந்த படம், கடைசி நேரத்தில் ஃபைனான்ஸ் பிரச்சினை காரணமாக தள்ளிப் போயுள்ளது. 2016ம் ஆண்டு தொடங்கப்பட்ட துருவ நட்சத்திரம் இப்போது வரை தொடர்ந்து பிரச்சினைகளை சந்தித்து வருகிறது.

இந்தப் படத்தை வெளியிடுவதற்காகவே படங்களில் நடிக்கத் தொடங்கினார் கெளதம் மேனன். அந்தளவிற்கு துருவ நட்சத்திரம் படத்தை தனது ட்ரீம் மூவியாக பார்க்கிறார் கெளதம். சிம்புவை வைத்து ‘சூப்பர் ஸ்டார்’ என்ற படத்தை இயக்கவிருந்தாராம் கெளதம் மேனன்.

இதற்காக ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் கெளதம் மேனன் 2.40 கோடி ரூபாய் பணம் வாங்கியுள்ளார். ஆனால், கெளதம் மேனன் சொன்னபடி சூப்பர் ஸ்டார் படமும் உருவாகவில்லை, அவரும் 2.40 கோடி ரூபாயை ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு திருப்பிக் கொடுக்கவில்லை.

இதனால், தங்களுக்கு பணம் தராமல் துருவ நட்சத்திரம் படத்தை வெளியிடக் கூடாது என அந்நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இதனையடுத்து ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் வாங்கிய 2.40 கோடி பணத்தை, வரும் திங்கள் அல்லது புதன் கிழமைக்குள் கொடுத்துவிடுவேன் என கெளதம் உறுதியளித்துள்ளார்.

முன்னதாக துருவ நட்சத்திரம் படத்தை சொன்னபடி ரிலீஸ் செய்துவிட வேண்டும் என கெளதம் மேனன் முயற்சி செய்துள்ளார். அதற்காக 23ம் தேதி இரவு தனியார் நட்சத்திர விடுதியில் ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினாராம். அப்போது கெளதம் மேனனுக்கு கடன் கொடுத்த மேலும் பலரும் அங்கு சென்றுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் நிச்சயம் பணம் தருவதாக கெளதம் கூறியுள்ளார்.

ஆனால், கடைசியாக அங்கு நடிகர் சிம்புவும் சென்றதாகவும், வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்ததற்காக தனக்கும் சம்பள பாக்கி இருப்பதாகவும் தெரிவித்துள்ளாராம். அதனை கொடுத்துவிட்டு துருவ நட்சத்திரம் படத்தை ரிலீஸ் செய்யலாம் என கெளதம் மேனனிடம் கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் கெளதம் மேனன் ரொம்பவே நொந்து போய்விட்டாராம். விண்ணைத்தாண்டி வருவாயா படம் மூலம் சிம்புவுக்கு கம்பேக் கொடுத்தவர் கெளதம் மேனன்.

அதனைத் தொடர்ந்து அச்சம் என்பது மடமையடா, வெந்து தணிந்தது காடு படங்களிலும் சிம்பு – கெளதம் மேனன் கூட்டணி இணைந்தது குறிப்பிடத்தக்கது. சிம்புவை வைத்து சூப்பர் ஸ்டார் என்ற படத்தை இயக்கவிருந்ததால் தான் கெளதம் மேனன் தற்போது ஃபைனான்ஸ் பிரச்சினையில் சிக்கியுள்ளார்.

இந்நிலையில் சிம்புவும் தற்போது வெந்து தணிந்தது காடு படத்தின் சம்பள பாக்கியை கேட்டுள்ளது அதிர்ச்சியை கொடுத்துள்ளது. வெந்து தணிந்தது காடு படத்தை ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் கெளதம் மேனன் தான் தயாரித்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்னர் சிம்புவால் தான் நான் மீண்டு வந்தேன் என கெளதம் மேனன் ஒரு பேட்டியில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

vikram gautham menon images stills 

(Visited 2 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்