சிவகார்த்திகேயன் வளர்ச்சி குறித்து பிரபல நடிகர் வெளியிட்ட தகவல்

அமரன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய மார்க்கெட்யை தனக்கென்று உருவாக்கிவிட்டார் சிவகார்த்திகேயன்.
இப்படத்தின் வெற்றிக்கு பின் சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்கள் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அந்த வகையில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி மற்றும் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், சிவகார்த்திகேயன் வளர்ச்சி குறித்து பிரபல நடிகர் சாம் பகிர்ந்த விஷயம் தற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், ” சினிமாவில் மிகவும் எளிதாக வெற்றியை அடைய முடியாது. சினிமாவை மிகவும் நேசித்தால் மட்டுமே வெற்றி கனியை எட்ட முடியும். அதுக்கு எடுத்துக்காட்டாக நடிகர் சிவகார்த்திகேயன் வலம் வருகிறார்.
அவர் சாதாரனமாக சினிமாவுக்குள் வரவில்லை. பல வருடங்கள் கஷ்டப்பட்டு அனுபவத்தை சரியாக பயன்படுத்திக்கொண்டு தான் தற்போது முன்னணி நடிகர் என்ற இடத்தை பிடித்துள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.