சினிமா வாழ்க்கையில் இருந்து ஓய்வு எடுக்கும் ரஜினி? அதிரடி அறிவிப்பு

நடிகர் ரஜினிகாந்த், தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார், ஏன் இந்திய சினிமா கொண்டாடும் முக்கிய பிரபலமாக உள்ளார்.
கடைசியாக ரஜினி நடிப்பில் வேட்டையன் என்ற படம் வெளியானது, ஆனால் அது பாக்ஸ் ஆபிஸிலும் சரி, விமர்சனத்திலும் சரி நல்ல வரவேற்பை பெறவில்லை.
தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து முடித்துள்ள ரஜினிகாந்த் இப்போது ஜெயிலர் 2 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். கடந்த 2023ம் ஆண்டு ஜெயிலர் படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டடிக்க இப்போது 2ம் பாகம் தயாராகி வருகிறது.
நடிகர் ரஜினிகாந்த், ஜெயிலர் 2 படத்திற்கு பிறகு எந்த படத்திலும் கமிட்டாகவில்லை என்பதால் அவர் ஓய்வு எடுப்பதாக ஒரு தகவல் பரவி வருகிறது.
இதுகுறித்து லதா ரஜினிகாந்த் கூறுகையில், ஜெயிலர் 2 படத்திற்கு பிறகும் நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்து நடிப்பார் என கூறியுள்ளார்.
(Visited 1 times, 1 visits today)