46 வயதில் முதல் குழந்தைக்கு “அப்பா”வாகினார் பிரேம்ஜி
இசையமைப்பாளர், பாடகர், நடிகர், நகைச்சுவை என பல துறைகளில் கலக்கிக்கொண்டு முரட்டு சிங்கிளாக வலம் வந்த பிரேம்ஜி அப்பாவாகிவிட்டார்.
கடந்த ஆண்டு இந்து என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்ட நிலையில், இந்த ஆண்டு தொடக்கத்தில் மனைவி கர்ப்பமானார்.

இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மனைவியின் வளைகாப்பு பங்க்ஷனை கிராண்ட் ஆக நடத்தி இருந்தார் பிரேம்ஜி.
இந்த நிலையில், இன்று பிரேம்ஜி – இந்து தம்பதிக்கு குழந்தை பிறந்திருக்கிறது. இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாம்.
46 வயதில் முதல் குழந்தைக்கு அப்பா ஆன பிரேம்ஜிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

(Visited 1 times, 1 visits today)





