மனோரமாவின் மகன் பூபதி காலமானார்

மறைந்த நகைச்சுவை நடிகை மனோரமாவின் மகனும், நடிகருமான பூபதி இன்று காலமானார்.
நடிகை மனோரமா 50 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் சினிமாவில் கோலோச்சி, 1000க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, உலக சாதனை புரிந்தவர். பூபதி, மனோரமாவின் ஒரே மகனாவார்.
பூபதி, சில தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். பூபதியின் மறைவு, அவரது குடும்பத்தினரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
காலஞ்சென்ற பூபதியின் உடல், பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
மனோரமாவின் ரசிகர்களும், திரையுலகினரும் பூபதி மறைவுக்குத் தங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
(Visited 4 times, 4 visits today)