பிரபல நடிகர் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்

சுந்தர் சி இயக்கத்தில் விமல், சிவா, சந்தானம், ஓவியா, அஞ்சலி நடித்து வெளிவந்த படம் கலகலப்பு. இப்படத்தில் சந்தானத்தின் கேங்கில் முக்கிய நபராக நடித்து நகைச்சுவையில் பட்டையை கிளப்பி இருப்பார் நடிகர் கோதண்டராமன்.
இவர் கடந்த 25 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில், 65 வயதாகும் நடிகர் கோதண்டராமன் உடல்நல குறைவு காரணமாக மரணமடைந்துள்ளார்.
சென்னையில் பெரம்பூரில் உள்ள அவரது இல்லத்தில் உயிர் பிரிந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
கோதண்டராமனின் மரணம் திரையுலகில் உள்ள பலரும் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ரசிகர்களும், திரையுலகினரும் தங்களது இரங்கலை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகிறார்கள்.
(Visited 17 times, 1 visits today)