இலங்கையில் மின் கட்டணத்தை 50 வீதத்தால் குறைக்க நடவடிக்கை!
இலங்கை மின்சார சபை கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் அமுல்படுத்தப்பட்ட 18 வீத அதிகரிப்பை ஈடுசெய்து, ஜனவரி மாத இறுதிக்குள் 50 வீதத்தினால் மின் கட்டணத்தை குறைக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் நோயல் பிரியந்த தெரிவித்தார்.
2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 20 ஆம் திகதி முதல் 18 வீத மின் கட்டண அதிகரிப்புக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) CEB க்கு அனுமதி வழங்கியிருந்தது.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், பெப்ரவரி மாதம் அதிகரிக்கப்பட்ட மின்கட்டணம், ஜூன் மாதம் குறைக்கப்பட்டு, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் மீண்டும் அதிகரிக்கப்பட்டது.
இதன்படி, ஒக்டோபர் மாதத்தில் அதிகரித்த கட்டணத்தில் இருந்து குறைந்தபட்சம் 50 வீதத்தால் கட்டணத்தை குறைக்கலாம் என CEB நம்புகிறது.
கட்டணத்தை குறைக்கும் முடிவு குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.