இந்தோனேசியாவில் (Indonesia) கப்பல் கட்டும் தளத்தில் விபத்து – பலர் உயிரிழப்பு!
இந்தோனேசியாவின் (Indonesia) பாட்டம் (Batam) தீவில் உள்ள ஒரு கப்பல் கட்டும் தளத்தில் இன்று வெடிப்பு சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
இதில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், 21 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
டான்ஜுன்குன்காங் (Tanjunguncang) துறைமுகத்தில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் கடமையில் ஈடுபட்டிருந்தபோது எரிபொருள் டேங்கரில் தீவிபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து பாரிய வெடிப்பு சம்பவம் ஏற்பட்டதாக மாகாண காவல்துறைத் தலைவர் அசெப் சஃப்ருதீன் (Asep Safrudin) தெரிவித்துள்ளார்.
காயமடைந்த 21 பேரில் நான்குபேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
தீவிபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.





