பாகிஸ்தானில் பசை தயாரிக்கும் தொழிற்சாலையில் விபத்து – 15 பேர் பலி!
கிழக்கு பாகிஸ்தானில் உள்ள ஒரு பசை தயாரிக்கும் தொழிற்சாலையில் இன்று இடம்பெற்ற வெடி விபத்தில் குறைந்தது 15 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 07 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
பஞ்சாப் (Punjab) மாகாணத்தில் உள்ள பைசலாபாத்தில் (Faisalabad) குறித்த விபத்து நிகழ்ந்துள்ளது.
வெடிப்புக்கான காரணத்தை அறிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 1 times, 2 visits today)




