பொழுதுபோக்கு

எதிர்பாராத ஏமாற்றத்தை தந்த தக் லைஃப் – OTT ரிலீஸ் குறித்து கசிந்த தகவல்

கடந்த வாரம் வெளிவந்த தக் லைஃப் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை.

இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவான இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படத்தில் கமலுடன் இணைந்து முதல் முறையாக சிம்பு நடித்திருந்தார்.

மேலும் அபிராமி, த்ரிஷா, ஜோஜு ஜார்ஜ், நாசர், அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. ஐந்து நாட்களில் உலகளவில் ரூ. 82 கோடி மட்டுமே வசூல் செய்து படுதோல்வியை சந்தித்துள்ளது.

இப்படியொரு தோல்வியை இப்படம் சந்திக்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை.

தக் லைஃப் திரைப்படத்தை ரிலீஸுக்கு பின் 8 வாரங்கள் கழித்துதான் OTT ஒளிபரப்ப வேண்டும் என நெட்பிளிக்ஸ் உடன் ஒப்பந்தம் செய்துள்ளனர்.

ஆனால், படம் படுதோல்வியடைந்துள்ள நிலையில் முன்கூட்டிய OTT ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது.

அதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் OTT ரிலீஸ் குறித்து அறிவிப்பு எதிர்பார்க்கலாம் என்கின்றனர்.

(Visited 3 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்