ஜி.வி பிரகாஷ் – சைந்தவி மீண்டும் இணைவார்களா?

நடிகரான ஜீவி பிரகாஷ் மற்றும் பாடகியான சைந்தவி இருவரும் 2013-இல் காதலித்து திருமணம் செய்து பின்பு 2024 இல் விவகாரத்து என அறிவித்ததும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கிளப்பியது.
பல வருடங்கள் காதலைத்து திருமணம் செய்தவர்களே இந்த முடிவை எடுக்கலாமா? என்று ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுப்பப்பட்டது. நாங்கள் மனம் ஒத்து தான் பிரிகிறோம் என்று கூறியும், ரசிகர்கள் விடாமல் கேள்விகளுக்கு உள்ளாக்கினர்.
சமூக ஊடகங்களில் இவர்களைப் பற்றி பயங்கரமான ட்ரோல்கள் வெளியானது. ஜிவி பிரகாஷ் வலைத்தளத்தில் நிலவும் இந்த விமர்சனங்களை பற்றி பேசி இருக்கிறார். இதைத்தொடர்ந்து இந்த வருடம் 2025 மார்ச் மாதம் இருவரும் விவாகரத்து பெற்றனர்.
பிரிவுக்குப் பிறகு சைந்தவி மற்றும் ஜிவி பிரகாஷ் இருவருமே மலேசியாவில் நடைபெற்ற இசை கச்சேரியில் ” பிறை தேடும் இரவிலே” பாடலை இணைந்து பாடியுள்ளனர். இது ரசிகர்களுக்கு மத்தியில் உற்சாகத்தை கிளப்பியது.
நா முத்துக்குமார் அஞ்சலி நிகழ்ச்சியில் மீண்டும் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி இணைந்து “யார் இந்த சாலையோரம்” பாடலை பாடியிருப்பது ரசிகர்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான். இருவரின் பாடல் வரிகள் கேட்பதற்கு எவ்வளவு அழகாய் இருக்கிறது.
பிரிந்த இந்த ஜோடி மீண்டும் இணைந்தால் நல்லா இருக்கும் என்று பல இசை ரசிகர்கள் தங்களது கருத்துக்களை வலைத்தளத்தில் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது இவர்கள் இருவரும் இணைந்து பாடிய பாட்டு வலைதளத்தில் z வேகத்தில் வைரலாகி வருகிறது.