ராஷ்மிகா இரகசிய நிச்சயதார்த்தமா? மோதிரத்தின் மர்மம்…

நடிகை ராஷ்மிகா மந்தனா நடிகர் விஜய் தேவரகொண்டா இருவரும் காதலித்து வருவது குறித்து பல தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது.
ஆனால், இருவரும் தங்களது காதலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
இருப்பினும் ஒன்றாக சுற்றி வருவது என பல இடங்களில் ஒன்றாக வலம் வரும் போட்டோ மற்றும் வீடியோ இணையத்தில் வந்த வண்ணம் உள்ளது.
சமீபத்தில், நியூயார்க்கில் நடந்த இந்திய தின அணிவகுப்பில் ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா வெளிப்படையாக கைகோர்த்து நடந்தனர். இது தொடர்பான போட்டோஸ் வெளியாகி இணையத்தில் வைரலானது.
இந்நிலையில், ராஷ்மிகா மந்தனா விஜய் தேவரகொண்டாவுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டாரா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ராஷ்மிகாவின் விரலில் இருந்த மோதிரம் கேமராவில் பதிவானது. இதனால் அவர் ரகசியமாக நிச்சியம் செய்து கொண்டாரா என்ற கேள்வி எழுந்த வண்ணம் உள்ளது.